இந்த உலகில் மனிதர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது செயல்களால் தான்,  தத்துவங்களால் அல்ல.

-அனடோல் பிரான்ஸ் 
கொஞ்சம் இரக்கம், கொஞ்சம் புகழ்ச்சி, கொஞ்சம் பாராட்டு, இவை மனைவியை மகிழ்விக்க போதும்.

-ஒலிவர் கோல்ட்ஸ்மித் 
ஒரு டன் வார்த்தையைவிட ஒரு அவுன்ஸ் செயல் மேலானது.

-மௌலானா முகம்மதலி 
ஒரு பெண் பேசும் போது நீயும் பேசாதே ஒரு புன்சிரிப்பு போதும்.

-லியுகின் 
மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருந்தால் அவர்களை நேசிக்க நேரம் இருக்காது.

-சாக்ரடீஸ் 
கண் ஒரு உறுப்பு, பார்வை ஒரு கலை.

-மார்ஷ் 
எனது வாழ்க்கையின் ரகசியம் மூன்று. நான் அதிகம் உண்பதில்லை, அதிகம் கவலைப்படுவதில்லை, எது நடந்தாலும் நன்மைக்கே என மகிழ்ச்சியுடன் ஏற்பேன்.

-ஹென்றி போர்ட்